தனது அப்பா கூறியதையும் மீறி கவினுக்காக சண்டையிடும் லாஸ்லியா - உச்சக்கட்ட கோபத்தில் ரசிகர்கள்!

தனது அப்பா கூறியதையும் மீறி கவினுக்காக சண்டையிடும் லாஸ்லியா - உச்சக்கட்ட கோபத்தில் ரசிகர்கள்!


big-boss-3-today-promo-video

பிக்பாஸ் சீசன் 3 மிகவும் விறுவிறுப்பாக இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்துகொண்டு இருக்கின்றது. நேரடியாக பைனலுக்கு செல்வதற்கான போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

இதில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான கடுமையான டாஸ்கை பிக்பாஸ் கொடுத்து வருகிறார். இதனால் பிக்பாஸ் வீட்டில் சண்டைகள் ஏற்பட ஆரம்பித்துவிட்டன. சக போட்டியாளர்களும் நண்பன், மகள், அப்பா, அண்ணன் என்றெல்லாம் பாராமல் கடுமையாக விளையாடி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது வந்த புதிய ப்ரோமோ லாஸ்லியா தனது அப்பா கூறியதையும் மீறி கவினுக்காக சாண்டியிடம் சண்டையிடுவது போன்ற காட்சி வெளியாகியுள்ளது. அதாவது லாஸ்லியாவின் தந்தை விளையாட்டில் மட்டும் கவன செலுத்து என கூறியும் கவினுக்காக லாஸ்லியா சண்டையிடுவதால் ரசிகர்கள் லாஸ்லியா மீது உச்சக்கட்ட கோபத்தில் உள்ளனர்.