ஓ ஷெரினு! வாவ் பிக்பாஸ் ரொமான்ஸ் ஜோடியின் ஆட்டத்தை பாருங்கள் - வைரலாகும் வீடியோ.
பிக்பாஸ் என்னும் மாஸான நிகழ்ச்சி தமிழில் முதன் முறையாக விஜய் டிவியில் ஆரம்பமானது. இந்நிகழ்ச்சி வெற்றிகரமாக மூன்று சீசன்களை கடந்துள்ளது. முதல் சீசனில் ஆரவ் பிக்பாஸ் பட்டத்தை வென்றார். இரண்டாவது சீசனில் ரித்விகா வென்றார்.
சமீபத்தில் முடிவடைந்த மூன்றாவது சீசனில் ரசிகர்களில் அதிகப்பட்ச ஆதரவை பெற்று முகேன் பட்டத்தை தட்டி சென்றார். பிக்பாஸ் விட்டை விட்டு வெளியேறிய பிறகு பிரபலங்கள் அனைவரும் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் ரொமான்டிக் ஜோடியான தர்ஷன் மற்றும் ஷெரின் பிக்பாஸ் கொண்டாடத்தின் முன்னோட்டமாக நடனம் ஆடி பழகி வருகின்றனர். இதனை வீடியோவாக எடுத்து தர்ஷன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகின்றது.