சினிமா பிக்பாஸ்

தர்ஷனின் பதிலுக்காக காத்திருத்த ஷெரின்! அதிரடியாக எடுத்த முடிவால் அதிர்ச்சியான ரசிகர்கள்.

Summary:

Big boss 3 tharshan sherin

இந்தியில் முதன் முதலில் ஆரம்பான பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 13 வது சீசனை வெற்றிகரமாக துவங்கியுள்ளது. அதன்பின்னர் தமிழில் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் துவங்கப்பட்டது. மேலும் சமீபத்தில் தான் பிக்பாஸ் சீசன் 3 வெற்றிகரமாக முடிவடைந்தது.

அதில் 16 போட்டியாளர்களுள் ஒருவராக கலந்து கொண்டவர் நடிகை ஷெரின். இவரின் அழகான பேச்சாலும், குணத்தாலும் மக்களால் பெரிதும் கவரப்பட்டார். அதன் காரணமாக மக்கள் இவரை இறுதி வரை கொண்டு வந்தனர்.

அதுமட்டுமின்றி இவர் தர்ஷனிடம் செய்யும் குறும்புகள் மக்களால் ரசிக்கப்பட்டது. ஷெரின் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது தர்ஷனுக்காக காதல் கடிதம் ஒன்றை எழுதினார். அதனை படித்த தர்ஷன் அதற்கான பதிலை வெளியில் கூறுவதாக கூறி இருந்தார்.

இந்நிலையில் தற்போது பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட ஷெரினிடம் கடிதம் பற்றி கேட்டுள்ளனர். அதற்கு பதிலளித்த ஷெரின் இதுவரை தர்ஷனிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. நானும் அவருடைய சொந்த விஷயத்தில் தலையிட விரும்பவில்லை என கூறியுள்ளார். 


Advertisement