சினிமா பிக்பாஸ்

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய தர்ஷன் முதலில் யாரை சந்தித்துள்ளார் என்று நீங்களே பாருங்கள் - வைரலாகும் புகைப்படம்.

Summary:

Big boss 3 tharshan sanam shessty

பிக்பாஸ் சீசன் மூன்று விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 99 நாட்களை கடந்துவிட்ட பிக்பாஸ் சீசன் இந்த வாரத்துடன் முடிவடைகிறது. 16 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது 4 பேர் மட்டுமே இறுதி வாரத்திற்கு தேர்வாகியுள்ளனர்.

முகேன் கோல்டன் டிக்கெட்டை கைப்பற்றி இறுதி வாரத்திற்கு நேரடியாக தகுதிபெற்ற நிலையில் மற்ற போட்டியாளர்கள் எவிக்சனுக்கு நாமினேட் செய்யப்பட்டிருந்தனர். இதில் லாஷ்லியா அல்லது ஷெரின் வெளியேற்றப்படுவார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் தர்சன் இந்த வாரம் வெளியேற்றப்பட்டார்.

தர்சனின் இந்த திடீர் வெளியேற்றம்  ரசிகர்கள் உட்பட மற்ற போட்டியாளர்கள் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. மேலும் தர்ஷன் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு முதலில் தன் காதலியான சனம் ஷெட்டியை சந்தித்துள்ளார். தற்போது அப்புகைப்படத்தை சனம் ஷெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

மேலும் சனம் நீ தான் வெற்றி பெற்றிருக்க வேண்டும். இருந்தாலும் மக்கள் மனதை நீ வென்று விட்டாய் என கூறியுள்ளார்.


Advertisement