BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
பட்டாசு தெறிக்கும் அட்டகாசம்! விஜய் டிவியின் பிரபலமான ஷோவில் கலந்து கொண்ட தர்ஷன், முகேன்-வைரலாகும் வீடியோ!
பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3யில் 16 போட்டியாளர்களுள் ஒருவராக கலந்து கொண்டவர்கள் முகேன், தர்ஷன். இவர்கள் இருவரும் இறுதி வரை சென்று மக்களின் மனங்களை வென்றவர்கள்.
சமீபத்தில் கோலாகலமாக நடைப்பெற்ற பிக்பாஸ் சீசன் 3 யின் இறுதி நிகழ்ச்சியில் முகேன் பிக்பாஸ் வெற்றியாளர் என்ற பட்டத்தையும் 50 லட்சம் பணத்தையும் தட்டி சென்றார். பின்னர் வீட்டை விட்டு வெளியேறிய போட்டியாளர்கள் மற்ற போட்டியாளர்களின் வீட்டிற்கு மகிழ்ந்து வந்தனர்.

முகேன் இங்கு அனைத்தையும் கொண்டாடி விட்டு தனது சொந்த நாடான மலேசியாவுக்கு சென்று வெற்றியை கொண்டாடினார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல ஷோவான தி வால் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர். அதனை தற்போது முகேன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.