இது நியாயமில்லை! கோபத்துடன் தர்ஷனின் காதலி சனம் ஷெட்டி வெளியிட்ட பதிவு - கடுப்பான ரசிகர்கள்!

இது நியாயமில்லை! கோபத்துடன் தர்ஷனின் காதலி சனம் ஷெட்டி வெளியிட்ட பதிவு - கடுப்பான ரசிகர்கள்!



Big boss 3 tharshan lover sanam shestty

பிக்பாஸ் சீசன் 3 மிகவும் விறுவிறுப்பாக இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்துகொண்டு இருக்கின்றது. 16 போட்டியாளர்கள் கலந்துகொண்ட நிலையில் தற்போது 6 பேர் மட்டுமே விளையாடி வருகின்றனர்.

இந்நிலையில் பிக்பாஸ் நாளுக்கு நாள் போட்டியாளர்களுக்கு கடுமையான டாஸ்கை கொடுத்து வருகிறார். இதனால் சக போட்டியாளர்கள் போட்டி போட்டு கொண்டு விளையாடி வருகின்றனர். மேலும் நேற்று தலைவர் போட்டிக்கான தேர்வு நடைபெற்றது.

அதில் முகேன் தலைவராக தேர்வானார். மேலும் நாமினேஷன் என்ற பெயரில் பிக்பாஸ் அனைவரையும் பச்சை மிளகாய் சாப்பிட வைத்தார். அதனை தர்ஷனும் சாப்பிட்டார்.

இதனை பார்த்த தர்ஷனின் காதலி சனம் ஷெட்டி மிகவும் கோபமாக தனது இன்ஸ்டாகிராம் இவ்வாறு பதிவிட்டுள்ளார். அதாவது “இது அவர் உடல்நிலையை மிகவும் மோசமாக பாதிக்கும். இது நியாயமில்லை. இதை நான் பார்க்க மாட்டேன்" என அவர் கூறியுள்ளார்.