சினிமா பிக்பாஸ்

அன்பு என்றும் அனாதை இல்லை! உருக்கமாக முகேன் பதிவிட்ட ட்வீட் - தீயாய் பரவும் வீடியோ.

Summary:

Big boss 3 mugen

பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 மிகவும் விறுவிறுப்பாகவும், அனைவரும் விரும்பும் வகையிலும் அமைந்தது. 16 போட்டியாளர்கள் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சியில் பிரபலங்களின் ஒருவராக மலேசியாவை சேர்ந்த முகேனும் கலந்து கொண்டார்.

முகேன் முதலில் பிரபலமாக வில்லை என்றாலும் அதன் பிறகு அவரின் பாடல் மூலம் அனைவரிடம் பிரபலமானார். மேலும் அனைவரிடமும் அன்பாகவும் நண்பர்களுக்கு ஆதரவாக இருந்ததால் மக்களால் மிகவும் ஈர்க்கப்பட்டார்.

அதுமட்டுமின்றி பிக்பாஸ் சீசன் 3 டைட்டிலையும் வென்று 50 லட்சம் பரிசு தொகையை தட்டி சென்றார். இந்நிலையில் தற்போது ஒரு மாலுக்கு வந்த போது ரசிகர்கள் அவரை சூழ்ந்து கொண்டனர். ரசிகர்களின் அன்பை தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோவாக பதிவிட்டு நெகிழ்ச்சியாக கூறியுள்ளார் முகேன்.


Advertisement