டைட்டில் வென்றதை விட இது தான் எனக்கு பெருமை! நெகிழ்ச்சியில் முகேன் பதிவிட்ட ட்விட்டர் பதிவு!

டைட்டில் வென்றதை விட இது தான் எனக்கு பெருமை! நெகிழ்ச்சியில் முகேன் பதிவிட்ட ட்விட்டர் பதிவு!


Big boss 3 mugen

கடந்த 105 நாட்களாக நடந்த பிக்பாஸ் சீசன் மூன்று கடந்த ஞாயிறுடன் முடிவுக்கு வந்தது. 16 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் முகேன் ராவ், லாஷ்லியா, ஷெரின் மற்றும் சாண்டி மாஸ்டர் ஆகிய நால்வர் மட்டும் இறுதி வாரத்திற்கு தேர்வாகினர்.

இதில் அதிக வாக்குகளை பெற்று முகேன் ராவ் சீசன் மூன்று பிக்பாஸ் பட்டத்தை கைப்பற்றியதோடு 50 லட்சம் பரிசு தொகையையும் வென்றார். இரண்டாம் இடத்தை சாண்டி மாஸ்டர் கைப்பற்றினர். மூன்று மற்றும் நான்காம் இடத்தை லாஷ்லியா மற்றும் ஷெரின் கைப்பற்றினர்.

Big boss 3

இந்நிலையில் பிக்பாஸ் பட்டத்தை வென்ற முகேன் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் பிக்பாஸ் பட்டத்தை வென்றதை விட தமிழ்நாட்டு மக்களின் மனதை வென்றதை பெருமையாக கருதுகிறேன் என கூறியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.