சினிமா

அந்த நடிகர் விரும்பினால் நானும் இணைந்து அதை செய்ய தயார்! நடிகை மதுமிதா பரபரப்பு ட்வீட்.

Summary:

Big boss 3 mathumitha latest Twitter

தமிழ் சினிமாவில் மிக சிறந்த காமெடி நடிகையாக அறிமுகமானார் நடிகை மதுமிதா. அதன் பிறகு திருமணமான நான்கு மாதத்திற்குள் பிக்பாஸ் சீசன் 3 யில் கலந்து கொள்ள அவருக்கு அழைப்பு வந்துள்ளது. அவரும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களின் மனதில் பிரபலமானார்.

ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஏற்ப்பட்ட கருத்து வேறுபாட்டால் தற்கொலை முயற்சியில் ஈடுப்பட்டார். அதன் காரணமாக நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் தற்போது படங்களில் பிசியாக நடித்துவருகிறார்.

தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் புதிய தகவல் ஒன்றை பதிவிட்டுள்ளார். தற்போது ஜி.வி.பிரகாஷ் உடன் ஆயிரம் ஜென்மங்கள் படத்தில் நடித்து வருகிறார். மேலும் நடிகர் ஜி.வி.பிரகாஷ் பல நாட்களாகவே சமூக நலம் சார்ந்த பல செயல்களை செய்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது ஜி.வி.பிரகாஷ் விரும்பினால் தானும் இணைந்து பணியாற்ற தயார் என ட்வீட் செய்துள்ளார்.


Advertisement