சினிமா

கவின்-லாஸ்லியாவை பற்றி புதிய தகவலை கூறிய சாண்டி! வைரலாகும் வீடியோ.

Summary:

Big boss 3 kavin Losliya sandy

பிக்பாஸ் சீசன் 3 யில் காதல் ஜோடியாக வலம் வந்தவர்கள் கவின், லாஸ்லியா. கவின் இதற்கு முன்பு சரவணன் மீனாட்சி என்ற சீரியல் மூலம் பிரபலமானவர். அதேபோல் லாஸ்லியா இலங்கையில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றியவர்.

இவர்கள் இருவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதிகப்படியான ரசிகர்கள் பட்டாளத்தை சம்பாதித்தவர்கள். இந்த நிகழ்ச்சியின் கடைசியில் லாஸ்லியா மூன்றாம் இடத்தை வென்றார்.

இந்நிலையில் பிக்பாஸ் முடிவடைந்த நிலையில் பிரபலங்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் சந்தித்து மகிழ்ந்து வருகின்றனர். தற்போது ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் சாண்டி மற்றும் தர்ஷன். இதில் சாண்டியிடம் கவின், முகேன், லாஸ்லியா பற்றி கேட்கப்பட்டது.

அதற்கு சாண்டி முகேன் மலேசியா சென்று விட்டார். கவின் படப்பிடிப்புக்காக வெளிநாடு சென்றுள்ளார் என கூறியுள்ளார். மேலும் லாஸ்லியா பற்றி கேட்கப்பட்டதற்கு அவரும் வெளிநாடு சென்றுள்ளார் என கூறியுள்ளார். இதனால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Advertisement