தனது காதல் குறித்து முதன் முறையாக வாய் திறந்த நடிகர் கவின்! மௌனத்தில் லாஸ்லியா!

Big boss 3 kavin Losliya


Big boss 3 kavin Losliya

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 யில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர் கவின். அனைவரும் அவர் இறுதி வரை செல்ல வேண்டும் என எதிர்பார்த்தனர்.

ஆனால் இடையிலேயே பணத்தை பெற்று கொண்டு வெளியேறி விட்டார். இது ரசிகர்களுக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியது. இருப்பினும் கவின் மற்றும் லாஸ்லியாவின் காதல் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Big boss 3

ரசிகர்கள் அனைவரும் கவின் - லாஸ்லியா இருவரும் சேர வேண்டும் என விரும்புகின்றனர். ஆனால் தற்போது கவின் கூறிய பதில் ரசிகர்களை ஷாக்காக செய்துள்ளது. அதாவது அண்மையில் நடைபெற்ற பிக்பாஸ் கொண்டாடத்தில் கவினிடம் லாஸ்லியா மீது ஏற்பட்ட காதல் குறித்து கேட்கப்பட்டது.

அதற்கு கவின் எனக்கு என்று நிறைய கடமைகள் இருக்கின்றது. எனவே மற்றவற்றை பற்றி சிந்திக்க நேரமில்லை எனக் கூறியுள்ளார். அதே நேரத்தில் லாஸ்லியாவும் மௌனம் காத்துள்ளார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.