காதல் ஜோடியான கவின் - லாஸ்லியாவுக்கு கிடைத்த பிரமாண்ட வாய்ப்பு! உற்சாகத்தில் ரசிகர்கள்

காதல் ஜோடியான கவின் - லாஸ்லியாவுக்கு கிடைத்த பிரமாண்ட வாய்ப்பு! உற்சாகத்தில் ரசிகர்கள்


Big boss 3 kavin Losliya

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 களில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமானவர் இலங்கை செய்தி வாசிப்பாளரான லாஸ்லியா. அதேபோல் சரவணன் மீனாட்சி புகழ் கவினும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

முதலில் கவினை பிடிக்காமல் இருந்த லாஸ்லியாவுக்கு காலப்போக்கில் கவினை பிடிக்க ஆரம்பித்தது. அதன்பின்னர் லாஸ்லியாவின் மேல் காதல் வயப்பட்ட கவின் தனது காதலை அவரிடம் கூறினார்.

Big boss 3

அதற்கு லாஸ்லியா இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ளலாம் என கூறி வருகிறார். இந்நிலையில் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி இரண்டாம் பாகத்தில் நடிப்பதற்கு இவர்களை கேட்டுள்ளனர். ஆனால் அதற்கு அவர்கள் சம்மதம் தெரிவித்துவிட்டார்களா என்ற அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.