சினிமா பிக்பாஸ்

முதன் முறையாக கவினை பற்றி ட்வீட் செய்த லாஸ்லியா! குவியும் லைக்குகள்.

Summary:

Big boss 3 kavin Losliya

பிக்பாஸ் சீசன் 3யின் இறுதி நாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. 105 நாள்கள் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் 16 பிரபலங்கள் கலந்து கொண்டனர். அதில் இறுதி கட்டத்திற்கு நால்வர் மட்டுமே தகுதி பெற்றனர்.

அதில் 50 லட்சம் பரிசு தொகையையும் பிக்பாஸ் பட்டத்தையும் மலேசியாவை சேர்ந்த முகேன் தட்டி சென்றார். சாண்டி இரண்டாம் இடத்தையும், லாஸ்லியா மற்றும் ஷெரின் 3ஆம் மற்றும் 4 ஆம் இடத்தை தட்டி சென்றனர்.

இந்நிலையில் லாஸ்லியா மற்றும் கவின் காதல் பிக்பாஸ் சீசன் 3 யில் பரபரப்பாக பேசப்பட்டது. கவின் தன் காதலை வெளிப்படுத்திய நிலையில் லாஸ்லியா எதுவும் சொல்லாமல் இருந்தார். தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் கவினை பற்றி கூறியுள்ளார்.

அதில் முதலில் பிக்பாஸ் மற்றும் கமலுக்கு நன்றி கூறிவிட்டு அதன் பின் மை கேம் சேஞ்சர் என கூறியுள்ளார். அதாவது பிக்பாஸ் இறுதி கொண்டாடத்தின் போது கமல், கவினுக்கு விருது அளிக்கும் போது கேம் சேஞ்சர் விருது வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement