கவின் - லாஸ்லியா பார்க்காமல், பேசாமல் இருப்பதற்கு இது தான் காரணமா! வெளியான புதிய தகவலால் ஷாக்கான ரசிகர்கள்.Big boss 3 kavin Losliya

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 யில் 16 போட்டியாளர்களுள் ஒருவர்களாக கலந்து கொண்டவர்கள் கவின் மற்றும் லாஸ்லியா. முதலில் கவினை பிடிக்காமல் இருந்த லாஸ்லியாவுக்கு பின்பு அவர் மீது காதல் ஏற்ப்பட்டது.

அதன் பிறகு பிக்பாஸ் இறுதி வரை அவர்களது காதல் கதையால் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்றுகொண்டிருத்தது. ஆனால் இவர்களது காதலுக்கு லாஸ்லியாவின் தந்தை சம்மதம் தெரிக்கவில்லை. இருப்பினும் இவர்கள் காதலித்து கொண்டு தான் இருந்தார்கள்.

Big boss 3

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதும் இவர்கள் இருவரும் தங்களது காதல் மற்றும் விஷயங்களை பற்றி வாய் திறக்காமல் இருந்து வந்தனர். அதுமட்டுமின்றி இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொள்வது இல்லை. பேசி கொள்வது இல்லை. இதனால் கவின் லாஸ்லியா ஆர்மிகள் மிகுந்த சோகத்தில் இருந்து வந்தது.

இந்நிலையில் இவர்கள் இருவரும் பார்த்து, பேசி கொள்ளாமல் இருப்பதற்கான காரணத்தை தற்போது கூறியுள்ளனர். அதாவது லாஸ்லியாவின் தந்தை நீங்கள் இருவரும் ஒரு வருடம் பார்த்து, பேசி கொள்ளாமல் இருக்க வேண்டும்.

Big boss 3

அதன் பிறகும் உங்களுக்குள் காதல் இருந்தால் நான் சம்மதம் தெரிவிக்கின்றேன் என கூறியுள்ளாராம். அதனால் தான் இருவரும் பேசிக்கொள்வது இல்லை என்ற புதிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.