சினிமா பிக்பாஸ்

கவின் இலங்கை சென்றுள்ளாரா! வெளியான புதிய தகவல்.

Summary:

Big boss 3 kavin Losliya

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 யில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர்கள் கவின் மற்றும் லாஸ்லியா. முதலில் கவின் வீட்டில் உள்ள அனைத்து பெண்களிடமும் விளையாட்டாக பழகி வந்தவர்.

அதன் பிறகு ஒரு கட்டத்தில் இலங்கையை சேர்ந்த லாஸ்லியாவை காதலிக்க தொடங்கியுள்ளார். அதனை வெளிப்படையாகவே நிகழ்ச்சியில் கூறியிருப்பார். ஆனால் லாஸ்லியா நாம் வெளியில் போய் பார்த்து கொள்ளலாம் என கூறியிருந்தார்.

இந்நிலையில் தற்போது பிக்பாஸ் கொண்டாட்டங்கள் நிறைவடைந்ததை அடுத்து கவின் வெளிநாட்டிற்கு சென்றுள்ளதாக சாண்டி ஒரு மேடையில் கூறியிருந்தார். ஆனால் அவர் தற்போது லாஸ்லியாவை பார்க்க இலங்கை சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை. 


Advertisement