லவ்வர் பாய் கவினால் களைகட்டிய மேடை! என்ன ஒரு ஆட்டம் - ஆரவாரம் செய்யும் ரசிகர்கள்Big boss 3 kavin fans

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 மக்கள் அனைவராலும் அதிகம் பேசப்பட்டவர் கவின். இவர் முதலில் கனா காணும் காலங்கள் என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் இன்னும் பிரபலமானார். மேலும் இந்த சீரியல் மூலம் அனைத்து பெண்களின் மனதிலும் இடம் பிடித்தார். அதன் பிறகு சிறிய இடைவெளியில் இருந்த கவின் மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களால் பேசப்பட்டார்.

Big boss 3

அதிலும் அவர் லாஸ்லியாவிடம் கொண்ட அக்கறை யாராலும் மறக்க முடியாது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு ஆர்மி என்றெல்லாம் ஒன்று உருவாகியது. இந்நிலையில் தற்போது பிக்பாஸ் கொண்டாடத்தில் இவரின் ஆட்டத்தை பார்த்து ரசிகர்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்து கொண்டாடி உள்ளனர்.