கையும் களவுமாக சிக்கிய கவின், லாஸ்லியா! இருட்டில் அப்படி என்ன தான் நடந்தது? - வெளியான புதிய ப்ரோமோ.

கையும் களவுமாக சிக்கிய கவின், லாஸ்லியா! இருட்டில் அப்படி என்ன தான் நடந்தது? - வெளியான புதிய ப்ரோமோ.


Big boss 2nd promo

பிக்பாஸ் சீசன் 3 மிகவும் விறுவிறுப்பாக 60 நாட்களை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது. முதல் 2 சீசன்களிலும் தொகுத்து வழங்கிய நடிகர் கமலே இந்த சீசனையும் தொகுத்து வழங்குகிறார். இதுவரையும் 7 போட்டியாளர்கள் வீட்டை விட்டு வெளியேறி உள்ளனர்.

பிக்பாஸ் வீட்டில் விருந்தினராக நுழைந்தவர் வனிதா. அவர் வந்ததிலிருந்து சண்டை, சச்சரவுமாக அதிகம் இடம் பெற்றதால் இன்னும் நிகழ்ச்சி சுவாரசியமாக மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

big boss3இந்நிலையில் இன்று சனிக்கிழமை என்பதால் நடிகர் கமல் இடையே உரையாடல் நிகழும். அதன்படி தற்போது ஒரு ப்ரோமோவை வெளியிட்டுள்ளனர். அதில் கமல் வீட்டில் உள்ளவர்களுக்கு விளக்கப்படம் ஒன்றை போட்டு காட்டுகிறார். 

அதில் லாஸ்லியா மற்றும் கவின் இருவரும் இரவில் பேசி கொள்வது போன்ற காட்சி காட்டப்படுகிறது. அந்த வீடியோவை பார்த்த கவின் மற்றும் லாஸ்லியா இருவரும் பதற்றத்தில் உள்ளனர். இந்த வீடியோவை பார்த்ததும் இன்று வீட்டில் ஏதோ  நிகழவிருக்கிறது என்பது மட்டும் உறுதியாகியுள்ளது.