சினிமா பிக்பாஸ்

வனிதா கூறியதை கேட்டு முகெனிடம் சண்டையிட்ட அபிராமி -கோபத்தில் முகென் செய்த செயல், அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Summary:

big boss 2 nd promo

பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி 50 நாட்கள் முடிவடைந்து மிகவும் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 16 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் பாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்யா, மீரா, ரேஷ்மா, சரவணன்,சாக்‌ஷி என 7 போட்டியாளர்கள் கடந்த நாட்களில் வெளியேற்றப்பட்டனர். 

இந்நிலையில் நேற்று பிக் பாஸ் ஒரு புதிய டாஸ்க்கை கொடுத்துள்ளார்.அதன்மூலம் விருந்தினராக உள்ளே நுழைந்துள்ளார் வனிதா.வனிதா வந்தது தன் வேலையை ஆரம்பித்துவிட்டார்.

இன்று வெளியான முதல் ப்ரோமோவில் வனிதா அபிராமியிடம் முகென் பற்றி பேசுகிறார். அதில் முகென் துர்கா பற்றி ஏதும் கூறினான என கேட்கிறார்.

இந்நிலையில் சற்று முன்பு வெளியான இரண்டாவது ப்ரோமோவில் அபிராமி மற்றும் முகென் இடையில் சண்டை எழுந்துள்ளது. ஒரு நிலையில் தன் கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் முகென் அபிராமியை தாக்க வருவது போன்ற ப்ரோமோ வெளியாகியுள்ளது.


Advertisement