பிக்பாஸ் வீட்டில் டான்ஸ் மாஸ்டருக்கு அருகில் இருக்கும் இதை கவனித்தீர்களா - வைரலாகும் புகைப்படம்!

பிக்பாஸ் வீட்டில் டான்ஸ் மாஸ்டருக்கு அருகில் இருக்கும் இதை கவனித்தீர்களா - வைரலாகும் புகைப்படம்!


big boss

பிக்பாஸ் சீசன் 3 விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 45 நாட்கள் முடிந்துள்ள நிலையில் இதுவரை 5 பிரபலங்கள் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இந்நிலையில் சமீபத்தில் இரவு யாரும் எதிர்பாராத வகையில் பருத்திவீரன் சித்தப்பு சரவணனை பிக்பாஸ் இல்லத்தில் இருந்து வெளியேற்றியுள்ளார் பிக்பாஸ்.

பெண்களிடம் தவறாக நடந்து கொண்டதாக கூறி பிக்பாஸில் இருந்து சரவணனை வெளியேற்றினார்கள். அவருக்கு பதில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக உள்ளே நுழைந்து உள்ளார் நடிகை கஸ்தூரி.

sandi

இந்நிலையில் இன்று வெளியான ப்ரோமோவில் டான்ஸ் மாஸ்டர் சாண்டி அமர்ந்திருக்கும் இடத்திற்கு பக்கத்தில் ஒரு பெயர் எழுதப்பட்டிருந்தது. இதனை பார்த்த ரசிகர்களுக்கு இது யாருடைய பெயர் என்ன குழப்பம் ஏற்பட்டிருக்கலாம்.

ஆனால் அந்தப் பெயர் எப்போதும் கலகலப்பாக்கும், சிரிப்பாகவும் இருந்து கொண்டிருக்கும் டான்ஸ் மாஸ்டர் சாண்டியின் மகள் பெயர் தான் அது.