சினிமா

என்னது.. வெண்பாவுக்கு ஜோடி இந்த வேலைக்காரன்தானா! மாஸ் என்ட்ரி கொடுத்த பிரபலம்! வைரலாகும் வீடியோ!!

Summary:

என்னது.. வெண்பாவுக்கு ஜோடி இந்த வேலைக்காரன்தானா! மாஸ் என்ட்ரி கொடுத்த பிரபலம்! வைரலாகும் வீடியோ!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ஏராளமான சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அவ்வாறு நாளுக்கு நாள் விறுவிறுப்பாக சென்று மக்களை கவர்ந்த தொடர்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. இத்தொடரில் ஹீரோவாக  பாரதி கதாபாத்திரத்தில் அருண் பிரசாத் மற்றும் கதாநாயகியாக கண்ணம்மா கதாபாத்திரத்தில் வினுஷா தேவி நடித்து வருகின்றனர்.

இத்தொடரில் வில்லியாக, ஹீரோ பாரதி மீது ஆசைப்பட்டு பயங்கர வில்லதனங்களை செய்யும் வெண்பா கதாபாத்திரத்தில் பரினா நடித்து வருகிறார். கதை தற்போது வித்தியாசமான பாதையில் நகர்ந்து கொண்டிருக்கின்றது. வெண்பாவின் அம்மாவாக வரும் ரேகா அவருக்கு திருமணம் செய்வதற்கு புதுசு புதுசா மாப்பிள்ளையை இறக்கியவண்ணம் உள்ளார்.

கடந்த எபிசோடில் நம்ம வீட்டு பொண்ணு ஹீரோ மாப்பிள்ளையாக வந்தார். இந்த நிலையில் தற்போது வேலைக்காரன் சீரியல் நடிகர் வெளிநாட்டு மாப்பிள்ளையாக என்ட்ரி கொடுத்துள்ளார்.

வெண்பாவை ரவுடிகள் கடத்த முயற்சி செய்யும் போது ஹீரோவாக மாஸ் எண்ட்ரி  கொடுத்து அவரைக் காப்பாற்றுகிறார். பின்னர் வெண்பா அவரை வீட்டிற்கு வரவழைத்து  அவரது அம்மாவிடம் அறிமுகம் செய்யும்போது மாப்பிள்ளை இவர்தான் என ரேகா வெண்பாவிற்கே ஷாக் கொடுத்துள்ளார். இந்த ப்ரோமோ வீடியோ வைரலாகி வருகிறது.


Advertisement