கண்டவனெல்லாம் உன் பொண்டாட்டிக்கு.. கொந்தளித்து பதிலளித்த பாரதி கண்ணம்மா வெண்பா! ஏன்? நடந்தது என்ன??bharathi-kannamma-farina-answer-to-hijab-issue

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் குந்தாப் புராவில் உள்ள கல்லூரி ஒன்றில் மாணவிகள் பர்தா அணிந்து வர தடைவிதிக்கப்பட்டதை தொடர்ந்து தற்போது மாநிலம் முழுவதும் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதற்கு பதிலடியாக இந்து மாணவிகள் காவி துண்டு அணிந்து கல்லூரிக்கு சென்றுள்ளனர்.

மேலும் ஹிஜாப் அணியும் மாணவிகளை வகுப்புக்குள் அனுமதித்தால் காவி துண்டு அணிந்த எங்களையும் அனுமதிக்க வேண்டும் என்று மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் கடந்த சில நாட்களாகவே முஸ்லீம் மற்றும் இந்து சமூகத்தினருக்கு இடையே பிரச்சினை நிலவி வருகிறது.

bharathi kannamma

மேலும் இதனால் பெரும் பதற்றமான சூழல் ஏற்பட்டு வருகிறது.  இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் பாரதி கண்ணம்மா சீரியல் வில்லி நடிகை பரினாவிடம் இதுகுறித்து ரசிகர் ஒருவர் கேட்டுள்ளார்.அப்பொழுது அவர், ஹிஜாப் அணிவது, பொட்டு வைப்பதெல்லாம் அவரவர் தனிப்பட்ட விருப்பம். கண்டவர்கள் எல்லாம் உங்களது வீட்டிற்கு வந்து உங்களுடைய மனைவியிடம் வேலை ஏவினால் நீங்க சும்மா இருப்பீங்களா! என கொந்தளித்து பதில் அளித்துள்ளார்.