வேற லெவல்...க்யூட் வீடியோ காட்சி...பாரதியை கட்டியணைத்து உறங்கும் கண்ணம்மா..வைரல் வீடியோ.!

வேற லெவல்...க்யூட் வீடியோ காட்சி...பாரதியை கட்டியணைத்து உறங்கும் கண்ணம்மா..வைரல் வீடியோ.!


Bharathi kannama today promo

பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் மிகவும் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியலில் ஒன்று பாரதி கண்ணம்மா. இச்சீரியல் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பொற்று டாப் சீரியலில் ஒன்றாக இருந்து வருகிறது. மேலும் இச்சீரியலில் மிகவும் சந்தோசமாக இருந்த பாரதி,கண்ணாம்மாவிற்கு இடையில் வில்லியாக வந்த வெண்பாவின் வில்லதனத்தால் இருவரும் 8 வருடங்கள் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

 

இந்நிலையில் பாரதி கண்ணம்மாவிடமிருந்து விவாகரத்து கேட்டு நீதிமன்றம் சென்ற போது வழக்கை விசாரித்த நீதிபதி இருவரையும் 6 மாத காலம் சேர்ந்து வாழ வேண்டும் என்று உத்தரவை பிறப்பித்தனர். எனவே பாரதி கண்ணாம்மாவும் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர்.

அண்மையில் வெளியான ப்ரோமோவில் அறந்தாங்கி நிஷா கண்ணாம்மாவிடம் வீட்டில் தங்களது உறவினர்கள் தங்குவதற்கு இடம் கேட்கிறார். அப்போது இருவரும் சேர்ந்து தூங்குவது இல்லை என்ற விஷயத்தை கூறுகிறார். அதனையடுத்து நிஷாவின் செயலால் இருவரும் ஒரே அறையில் உறங்குகின்றனர்.அப்போது இருவரும் செய்யும் ரொமான்டிக் செயல்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.