படப்பிடிப்பு தளத்தில் விபத்து.. பிரபல நடிகை, நடிகருக்கு காயம்.. ரசிகர்கள் அதிர்ச்சி.!Bengali Actress Priyanka Sarkar Web Series Shooting Accident She Injury Admit Hospital

வெப் சீரிஸ் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தில் நடிகை பிரியங்கா சர்க்கார் காயம் அடைந்தார்.

பெங்காலி திரையுலகில் பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் பிரியங்கா சர்க்கார். பெங்காலி திரைப்பட நடிகர் அர்ஜுன் சக்கரபோர்த்தி. இவர்கள் இருவரும் சேர்ந்து வெப் சீரிஸ் ஒன்றில் நடித்து வருகின்றனர். இந்த வெப் சீரிஸின் படப்பிடிப்பு அங்குள்ள நியூ டவுன் பகுதியில் நடைபெற்று வந்த நிலையில், நேற்று இரவு நேரத்தில் படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வந்துள்ளது. 

Bengali

இதன்போது, பிரியங்கா சர்க்கார் மற்றும் அர்ஜுன் சக்கரபோர்த்தி பைக்கில் ஒன்றாக வருவது தொடர்பான காட்சிகள் படம் பிடிக்கப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், படப்பிடிப்பு தளத்திற்குள் பைக்குடன் அதிவேகத்தில் வந்த மர்ம நபர், பிரியங்கா மற்றும் அர்ஜுன் இருந்த பைக்கை இடித்து அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். 

Bengali

இந்த விபத்தில் பைக்கில் இருந்து கீழே விழுந்த இருவரும் காயமடைந்த நிலையில், அர்ஜுன் சக்கரபோர்த்தி லேசான காயத்துடன் தப்பித்தார். அவருக்கு அருகில் உள்ள மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். 

Bengali

படுகாயம் அடைந்து இருந்த நடிகை பிரியங்கா சர்க்கார், அருகேயுள்ள மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டு முதலுதவிக்கு பின்னர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டார். 

Bengali

அவருக்கு கால்கள் மற்றும் உடல் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், கால்களில் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த விஷயம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் இருசக்கர வாகனத்தில் வந்து சென்ற மர்ம நபருக்கு வலைவீசியுள்ளனர்.