பீஸ்ட் பட நடிகை காலமானார்.. கண்ணீரில் திரையுலகம்.!

பீஸ்ட் பட நடிகை காலமானார்.. கண்ணீரில் திரையுலகம்.!



Beast movie actress deep condolence

ஆல் இந்தியா ரேடியோவில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் சுப்புலட்சுமி. இவர் பின்னணிப் பாடகியாகவும், இசையமைப்பாளராகவும் இருந்தவர். மேலும் விளம்பரப் படங்களிலும் நடித்துள்ள இவர், ஹார்லிக்ஸ் விளம்பரத்தில் நடித்து மிகவும் பிரபலமானார்.

beast

இதையடுத்து கடந்த 2002ம் ஆண்டு பிரித்விராஜ் இயக்கத்தில் வெளியான "நந்தனம்" திரைப்படத்தில் வெள்ளித்திரையில் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து கல்யாணராமன், ராப்பகல், திலகம், சிஐடி மூசா, ராணி பத்மினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

மேலும் விண்ணைத் தாண்டி வருவாயா, விஜயின் பீஸ்ட் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். கிட்டத்தட்ட 75 படங்களில் நடித்திருக்கும் சுப்புலட்சுமி, டப்பிங் கலைஞராகவும் சில படங்களில் பணியாற்றியிருக்கிறார். மேலும் சில தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார்.

beast

இந்நிலையில் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட சுப்புலட்சுமி, நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு திரையுலகினர் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.