புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
விஜய்யின் பீஸ்ட் படம் எப்படியிருக்கு?? முக்கிய நபர் வெளியிட்ட முதல் விமர்சனம்! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!
தமிழ் சினிமாவில் கோலமாவு கோகிலா, டாக்டர் என அடுத்தடுத்தாக பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை இயக்கி மக்களிடையே பிரபலமானவர் இயக்குனர் நெல்சன் திலீப்குமார். அவர் தற்போது விஜய் நடிப்பில் பீஸ்ட் படத்தை இயக்கியுள்ளார். இதில் விஜய்க்கு ஜோடியாக பிரபல தெலுங்கு நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார். பீஸ்ட் திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே ஏப்ரல் 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் இங்கிலாந்து மற்றும் துபாய் நாட்டின் சென்சார் போர்டு உறுப்பினரான உமர் சந்து என்பவர் பீஸ்ட் படத்தின் முதல் விமர்சனத்தை வெளியிட்டுள்ளார். அவர் தனது இன்ஸ்டாகிராமில், பீஸ்ட் அனைத்து அம்சங்களும் நிறைந்து சிறந்த திரில்லர் படமாக உருவாக்கப்பட்டுள்ளது. இது ஆற்றல் மிகுந்த படைப்பு. எந்தவித மிகைப்படுத்தலும் இன்றி நன்கு புரிந்து கொள்ளும் வகையில் கதையை விளக்கியுள்ளனர்.
நடிகர் விஜய்யின் நடிப்பு அட்டகாசம். மொத்ததில் பீஸ்ட் ஒரு மிடுக்கான ஆக்ஷன் மிகுந்த திரில்லராக உள்ளதால் கண்டிப்பாக உங்களை கவரும். அதில் மால் செட் கண்ணைக்கவரும் வகையில் அமைந்துள்ளது. விறுவிறுப்பான திரைக்கதைக்கு மிக்க நன்றி என தெரிவித்துள்ளார். மேலும் பீஸ்ட் படத்திற்கு நான்கு ஸ்டார்களையும் அவர் கொடுத்துள்ளார்.