BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
பிரசன்னாவிற்கு முன் சினேகா காதலித்த நபர் இவர் தானா? அப்புறம் என்னாச்சு தெரியுமா.?!
90ஸ் ரசிகர்களால் புன்னகை அரசி என செல்லமாக அழைக்கப்படும் நடிகை தான் சினேகா. இவர் ஒரு காலத்தில் அதிகப்படியான படங்களில் நடித்து வந்தார். தமிழ் சினிமா மட்டுமல்லாமல் மலையாளம் தெலுங்கு உள்ளிட்ட படங்களிலும் சினேகா நடித்து புகழ்பெற்றார்.
இவரது ஹோம்லி லுக் ரசிகர்கள் மத்தியில் மிகவும் ஈர்ப்பை ஏற்படுத்தியது. அழகு என்பதை தாண்டி சினேகாவிடம் நடிப்பு திறமையும் இருந்தது அவருக்கு நல்ல சினிமா வாய்ப்புகளை பெற்று தந்தது.

முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடி சேர்ந்து சினேகா நடித்துள்ளார். கடந்த 2009 இல் அச்சமுண்டு அச்சமுண்டு எனும் திரைப்படத்தில் நடிகர் பிரசன்னா உடன் சேர்ந்து அவர் நடித்தார். அப்போது இருவருக்கும் இடையில் நட்புணர்வு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவர்களுக்கு காதலும் வந்தது. இவர்கள் இருவரும் பெற்றோர் சம்பந்தத்துடன் நீண்ட இடைவெளிக்கு பின் திருமணம் செய்து கொண்டனர். நிறைய நட்சத்திர தம்பதிகளுக்கு நடுவில் சினேகா பிரசன்னாவும் ஒருவராக இருக்கின்றனர். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் ஒரு ஆண் குழந்தையும் இருக்கிறது.திருமணத்திற்கு பின் சிறிது ஓய்வு எடுத்துக் கொண்ட நடிகை சினேகா மீண்டும் படம் நடிக்க தொடங்கினார். தனக்கு கிடைக்கும் கதாபாத்திரங்கள் அனைத்திலும் நடித்து கொண்டு இருக்கிறார்.

விஜய் நடிப்பில் தயாராகி வரும் கோட் படத்திலும் சினேகா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அது மட்டுமல்லாமல் இவர் நிறைய ரியாலிட்டி ஷோக்கலில் பங்கேற்று வருகிறார்.
பிரசன்னாவிற்கு முன்பாக நடிகை சினேகாவிற்கு நாக் ரவி என்பவருடன் காதல் ஏற்பட அவர் மோதிரம் மாற்றி நிச்சயதார்த்தமும் செய்து கொண்டார். அதற்குப்பின் அவர்களுக்கு நடுவில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதில், சினேகா அவரை பார்த்து நீ எனக்கு வேண்டாம் என முகத்திற்கு நேரே கூறிவிட்டு பிரேக் அப் செய்துள்ளார். அதன்பின் தான் படங்களில் நடித்து வந்த சினேகாவிற்கு பிரசன்னாவுடன் நட்புணர்வு ஏற்பட்டு அவர்கள் திருமணம் செய்து கொண்டதாக பிரபல நடிகர் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்து இருப்பது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.