கிளிசரின் போட்டு விஜயகாந்தின் நினைவிடத்தில் அழுத சூர்யா?: பயில்வானின் சர்ச்சை சந்தேகம்.!

கிளிசரின் போட்டு விஜயகாந்தின் நினைவிடத்தில் அழுத சூர்யா?: பயில்வானின் சர்ச்சை சந்தேகம்.!



  Bayilvan Ranganathan about Surya Cry After Use Artificial TEARS Drops

 

மறைந்த நடிகர் விஜயகாந்தின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்க இயலாத நடிகர்கள், தொடர்ந்து அவரின் நினைவிடத்திற்கு சென்று தங்களின் மரியாதையை செலுத்தி வருகின்றனர். விஜயகாந்தின் மனைவி பிரேமலதா மற்றும் அவரது மகன்களை நேரில் சந்தித்தும் ஆறுதல் கூறி வருகின்றனர். 

விஜயகாந்தின் மறைவின்போது நடிகர்கள் கார்த்திக், சூர்யா ஆகியோர் வெளிநாட்டில் இருந்த நிலையில் அவர்கள் நாடு திரும்பியதும் நேரில் தங்களின் அஞ்சலியை பதிவு செய்தனர். 

நடிகர் சூர்யா விஜயகாந்தின் நினைவிடத்திற்கு வந்து மரியாதை செலுத்தியபோது கண்கலங்கி தனது துக்கத்தினை வெளிப்படுத்தி இருந்தார். மேலும், விஜயகாந்துடன் பணியாற்றிய தனது நினைவுகளையும் பகிர்ந்தார். 

Latest news

இந்நிலையில், நடிகர் சூர்யா கேப்டன் விஜயகாந்தின் மறைவுக்கு சென்றபோது கண்கலங்கி அழுத்தத்திற்கு அழுகையை வரவழைக்கும் கிளிசரின் காரணமாக இருக்கலாம் என பயில்வான் ரங்கநாதன் விமர்சித்து இருக்கிறார். 

இதுகுறித்து அவர் தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், "கேப்டன் இறந்துவிட்டார். இதற்கு ஒருவர் இரங்கல் செய்தியை எப்படிவேண்டுமானாலும் சொல்லலாம். அமைதியாக கூறவேண்டியதை சூர்யா காரில் சென்றவாறு கூறினார். 

இவ்வாறு சூர்யா நடந்துகொண்டது தவறு. சூர்யா, கார்த்திக், சிவகுமார் ஆகியோர் சேர்ந்து வந்து அஞ்சலி செலுத்தி இருக்கலாம். அவர்கள் அவ்வாறு செய்யாமல் இருக்க காரணமும் உள்ளது. சூர்யா-ஜோதிகா திருமணத்தின்போது, திருமணபத்திரிகை கொடுக்க விஜயகாந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. 

Latest news

விஜயகாந்தோ தான் திருமணத்திற்கு வரவில்லை என்று கூறிவிட்டார். திருமணத்தில் ஜெயலலிதா, கருணாநிதி என பலரும் வருவார்கள் என சிவகுமார் கூறியது விஜயகாந்துக்கு ஆத்திரத்தை தந்தது. சூர்யாவின் திருமணம் நடைபெற்று முடிந்த ஒரு மாதம் கழித்தே பரிசுப்பொருட்களை வழங்கி வந்தார். 

இதனை மனதில் வைத்தே, மகன்களுக்கு கெட்டபெயர் வந்துவிடக்கூடாது என நேரில் சென்றுள்ளனர். சூர்யா விஜயகாந்தின் நினைவிடத்திற்கு வரும்போதே கிளிசரின் போட்டு வந்தாரா?. ஏனெனில் நடிகர்களின் அழுகை எங்களுக்கு தெரியும். கிளிசரின் போடாமல் எப்படி அழுவார் எனவும் தெரியும்" என கூறியுள்ளார். இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.