ரேகா நாயர் விவகாரம் குறித்து மனம்திறந்த பயில்வான் ரங்கநாதன் : மேடையில் பரபரப்பு பேட்டி..!bayilvan-ranganathan-about-actress-rekha-nair-issue-TE2R4T

இரவின் நிழல் படத்தில் ரேகா நாயர் நிர்வாணமாக நடித்ததற்கு கண்டனம் தெரிவித்து பேசிய பயில்வான் ரங்கநாதனுடன் நடிகை வாக்குவாதம் செய்தது குறித்த விவகாரம் தொடர்பாக பயில்வான் மனம்திறந்து பேசியுள்ளார்.

கடந்த மாதத்தில் வெளியான இரவின் நிழல் படத்தில் நடித்த நடிகை ரேகா நாயர் நிர்வாண காட்சிகளில் தோன்றியிருந்த நிலையில், பயில்வான் ரங்கநாதன் தனது கடுமையான விமர்சனத்தை முன்வைத்திருந்தார். இதனால் கொந்தளித்த நடிகை பயில்வான் ரங்கநாதனை கடற்கரையில் மக்கள் முன்னிலையில் திட்டித்தீர்த்தார். காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டது. 

இந்நிலையில், திரைப்பட வெளியீட்டு விழாவில் பேசிய பயில்வான் ரங்கநாதன், "நான் அவதூறாக பேசவில்லை. நான் அவதூறாக பேசியிருந்தால் சட்டம் என்னை தண்டிக்கும். சின்னத்திரை நடிகை சித்ரா உயிரிழந்துவிட்டார். அவரின் தோழி யூடியூபில், "அவரின் வீட்டில் காண்டம், போதைமாத்திரை இருந்தது" என பேசியிருக்கிறார். அவர் பேசியதை நான் கூறினேன். இதை நானாகவா பேசுனேன்?. அவர் சொன்னதையே கூறினேன். 

அன்று கடற்கரையில் பிரச்சனை நடக்கும் போது நான் உணர்ச்சிவசப்பட்டு இருந்தால் என்ன ஆகியிருக்கும். நான் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆருடன் வாழ்ந்தவன். நான் பொய் சொல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. நான் பொய்கூறினால் பேசுவதை எப்படி பார்ப்பார்கள்?. நடிகர் ரஜினிகாந்த் கூட அரசியலுக்கு வரமாட்டார் என்று பேசினேன். அவர் அரசியலுக்கு வந்தாரா?.

Bayilvan Ranganathan

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக வெளியான படத்தை மதுரையில் மக்களை பார்க்க வைக்க, அரசியலுக்கு கூட்டம் கூட்டுவதை போல மக்களுக்கு சலுகை கொடுத்து அழைத்து வந்து பார்க்க வைக்கிறார்கள். தயாரிப்பாளர் திரைப்பட விமர்சனத்தை விலை கொடுத்து வாங்க வைக்கிறார். என்னை குறைசொல்ல யாருக்கும் தகுதி இல்லை. 

நான் பேசியதை விமர்சிக்க ஆட்களே இல்லை. தேவயானி, நதியா உட்பட பல நடிகைகள் குறித்து நான் பேசியதே இல்லை. தவறாக யார் ஈடுபடுகிறார்களோ அவர்கள் குறித்து பேசுகிறேன். என்னால் பல யூடியூப் பக்கங்கள் வாழ்ந்து வாழ்ந்து வருகிறது" என்று பேசினார்.