அடேங்கப்பா, பாவனாவா இது! ரசிகர்களை திரும்ப திரும்ப பார்க்கவைக்கும் கொள்ளை அழகு வீடியோ!!

அடேங்கப்பா, பாவனாவா இது! ரசிகர்களை திரும்ப திரும்ப பார்க்கவைக்கும் கொள்ளை அழகு வீடியோ!!


bavana-in-99-remake-movie-trailer-video

கடந்த ஆண்டு பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடிப்பில்  வெளியான திரைப்படம் 96, அழகிய காதல் கதையை மையமாக கொண்ட இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் இப்படம் 100 நாட்கள் திரையிடப்பட்டு வசூலிலும், விமர்சனத்திலும் பெரும் சாதனை படைத்தது. 

இந்நிலையில் இந்த வெற்றியை தொடர்ந்து, கடும் போட்டிகளுக்கு மத்தியில் தற்போது 96 படம் தெலுங்கு, கன்னடம், இந்தி, உள்ளிட்ட மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. 

Bavana

மேலும் கன்னட மொழியில்  இப்படம் '99 ' என்கிற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இந்த படத்தில். நடிகர் கணேஷ் விஜய் சேதுபதியாகவும்,  பாவனா திரிஷாவாகவும் நடித்து வருகின்றனர். இந்த படத்தை இயக்குனர் ப்ரீத்தம் குப்பி இயக்கி வருகிறார்.

 99 படத்தின் டிரைலர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. மேலும் அந்த வீடியோ  இதுவரை 6 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளுடன் 500 k லைக்குகளை பெற்றுள்ளது.

மேலும் இன்று 1.7 மில்லியனுக்கு அதிகமான பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது. இப்படத்தில்  பாவனா மிகவும் அழகாக இருப்பதாகவும், அவரை பார்ப்பதற்காகவே இந்த வீடியோவை பார்க்கலாம் எனவும் கூறி வருகின்றனர்.