சினிமா

அட.. எப்படி வளந்துட்டாங்க!! காதல் நாயகன் பரத்தின் இரட்டை மகன்களை பார்த்தீருக்கீங்களா! செம கியூட்ல!!

Summary:

தமிழ் சினிமாவில் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பைப் பெற்ற பாய்ஸ் திரைப்படத்தில்

தமிழ் சினிமாவில் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பைப் பெற்ற பாய்ஸ் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகர் பரத். அதனைத் தொடர்ந்து அவர் விஷால் நடிப்பில் வெளிவந்த செல்லமே திரைப்படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவரது சினிமா வாழ்க்கையில் திருப்பு முனையாக அமைந்த திரைப்படம் காதல்.

இப்படத்தை தொடர்ந்து அவருக்கு ஏராளமான பட வாய்ப்புகள் வரதுவங்கியது. மேலும் அவர் சினிமா துறையில் முன்னணி இளம் நடிகராகவும் வலம் வந்தார். நடிகர் பரத் நடிப்பு மட்டுமின்றி நடனத்திலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர். நடிகர் பரத் இறுதியாக காளிதாஸ் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் நடிகர் பரத்திற்கு கடந்த 2013 ஆம் ஆண்டு தனது சிறுவயது தோழியான 
ஜெஸ்லி ஜோஸ்வா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு 2018ஆம் ஆண்டு அழகிய இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தது. இந்நிலையில் ஒரு சில தினங்களுக்கு முன்பு தனது மகன்கள் ஆத்யன் மற்றும் ஜெய்தன் உடன் பரத் தனது மனைவியின் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். மேலும் அந்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்ட நிலையில் அது வைரலாகி வருகிறது. மேலும் அதனை கண்ட ரசிகர்கள் நல்லா வளர்ந்துட்டாங்களே என மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Advertisement