BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
"ஏமாற்றியவர்கள் மீது வழக்கு தொடருவாரா ஏ. ஆர். ரஹ்மான்" பிக்பாஸ் பிரபலம் பாலாஜி அதிரடி கேள்வி.!
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏ,ஆர்.ரஹ்மானின் 'மறக்குமா நெஞ்சம்' இசை நிகழ்ச்சி சென்னை ஈசிஆர் சாலையில் ஒரு திறந்தவெளி அரங்கில் நடைபெற்றது. அப்போது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் செய்த குளறுபடியால், பணம் செலுத்தி வந்த ரசிகர்கள் வாசலிலேயே திருப்பி அனுப்பப்பட்டனர்.

மேலும் உள்ளே சென்ற ரசிகர்களும் உட்கார இடமின்றி, கூட்ட நெரிசலில் சிக்கினர். வாகனங்களை நிறுத்தவும் போதுமான இடவசதி செய்யவில்லை என்று தெரிகிறது. இந்த சம்பவம் மிகப்பெரிய சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.
இதையடுத்து, திரையுலகினர் பலரும் ரஹ்மானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து "இந்தக் குளறுபடிகளுக்கு நானே பலிகடாவாகிறேன்" என்று ரஹ்மான் கூறியிருந்தார். இந்நிலையில், நடிகர் கார்த்தி "ஏ.ஆர்,ரஹ்மானை நாம் அறிவோம், அவர் மீது தவறில்லை" என்று பதிவிட்டிருந்தார்.

அதற்கு பதிலளித்து பிக் பாஸ் புகழ் பாலாஜி முருகதாஸ், "ரஹ்மானை யாரும் வெறுக்கவில்லை. குறைந்தபட்சம் அந்த நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்வாரா ரஹ்மான்? என்று தான் ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்" என்று கூறி பரபரப்பைக் கிளறியுள்ளார்.