சினிமா வீடியோ

பிக்பாஸிற்கு வருவதற்கு முன்பே பாலா விஜய் டிவியில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளாரா? அதுவும் எந்த நடிகையுடன் பார்த்தீர்களா! வைரலாகும் வீடியோ!

Summary:

பாலா மூன்று வருடங்களுக்கு முன்பே விஜய் தொலைக்காட்சியில் கனெக்சன் நிகழ்ச்சியில் யாசிகாவுடன் கலந்து கொண்டுள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் சீசன் நான்கில் 16 போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்டவர் பாலாஜி. மாடலான இவர் 2018 ஆம் ஆண்டு மிஸ்டர் இந்தியா போட்டியில் கலந்துகொண்டு பட்டத்தை வென்றார். 

இவர் பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் அனைவரிடமும் முகத்துக்கு நேராக பேசக்கூடியவர். எதையும் யோசிக்காமல் முரட்டுத்தனமாக கோபப்பட கூடியவர். பலர்  இவரை விரும்பினாலும் சிலர் இவர் குறித்த மோசமான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். பாலாஜி நடிகை யாஷிகாவின் நண்பர் ஆவார்.

இந்த நிலையில் பாலா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பாகவே விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய கனெக்ஷன்
 நிகழ்ச்சியில் நடிகை யாஷிகாவுடன் கலந்து கொண்டுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


Advertisement