சினிமா

என்ன பண்றது? வேற வழியில்லை! திடீரென பாக்கியலட்சுமி சீரியல் கோபி வெளியிட்ட வீடியோ! என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா!!

Summary:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று, விறுவிறுப

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று, விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் தொடர் பாக்கியலட்சுமி. சாதாரண குடும்ப தலைவியாக இருக்கும் பெண்ணின் கதையை எடுத்துரைக்கும் வகையில் இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. 

பாக்கியலட்சுமி தொடரில் முன்னாள் காதலியுடன் தொடர்பில் இருந்துகொண்டு மனைவியின் கஷ்டங்களை புரிந்து கொள்ளாமல், எதற்கெடுத்தாலும் அவரையே குறைகூறி எப்பொழுதும் திட்டிக் கொண்டே இருக்கும் கோபக்கார கணவர் கதாபாத்திரத்தில் கோபியாக நடித்து வருபவர் சதீஷ். கடந்த வாரம் ஒளிபரப்பான எபிசோடுகளில் இவரது பேச்சுக்கள் மற்றும் செயல்கள் அனைத்தும் ரசிகர்களை பெருமளவில் கடுப்பாக்கியது.

இந்நிலையில் பலரும் அவரை மோசமாகத் திட்டி இணையத்தில்  கமெண்ட் செய்து வருகின்றனர். அதனைத் தொடர்ந்து நடிகர் சதீஷ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நான் என்ன செய்வது? முதலாளி சம்பளம் கொடுக்கிறாரு. நான் நடிச்சே ஆகணும். 

 ஹீரோவா நடிச்சா ஏதாவது ரசனையா செய்ய முடியுமா? வில்லனா நடிச்சாதான் ஸ்டைலா, கெத்தா ஏதாவது பண்ண முடியும். மேலும் நான் கதைக்காகதான் அப்படி நடிக்கிறேன். நீங்க எவ்வளவு திட்டினாலும் கோபித்துக் கொண்டாலும் அதை நான் எனக்குக் கிடைத்த விருதாகவே நினைத்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.


Advertisement