சினிமா

பாக்கியலட்சுமி சீரியல் நடிகர், நடிகைகள் ஒரு நாளைக்கு வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? அதிக சம்பளம் வாங்குவது யார் பார்த்தீர்களா!!

Summary:

விஜய் தொலைக்காட்சியில் வித்தியாசமான கதைக்களத்துடன், ஏராளமான சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறத

விஜய் தொலைக்காட்சியில் வித்தியாசமான கதைக்களத்துடன், ஏராளமான சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அவ்வாறு ஒளிபரப்பாகி குடும்ப பெண்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வரும் தொடர் பாக்கியலட்சுமி. ஒரு சாதாரண குடும்பத் தலைவி குடும்பத்தை கவனித்துக்கொண்டு, தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்க போராடுவதை மையமாக கொண்டு இத்தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.

பாக்கியலட்சுமி தொடர் தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டுள்ளது. இந்த தொடருக்கு என ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இந்த நிலையில் தற்போது பாக்கியலட்சுமி தொடரில் நடிக்கும் நடிகர் மற்றும் நடிகைகள் ஒரு  நாளைக்கு வாங்கும் சம்பளம் குறித்த தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதில் பாக்கியலட்சுமியாக நடிக்கும் சுசித்ரா ரூ.15000, கோபிநாத்தாக நடிக்கும் சதிஷ் ரூ.12000, ராதிகாவாக நடித்த ஜெனிஃபர் மற்றும் ரேஷ்மா ரூ.12000 சம்பளம் பெற்றுள்ளனர். மேலும் ஈஸ்வரி 12000, ஜெனி 10,000, செழியன், எழில் மற்றும் அமிர்தா தலா ரூ.10000, இனியா ரூ 8000 சம்பளமாக பெறுவதாக கூறப்படுகிறது.


Advertisement