இதெல்லாம் நியாயமா? தயவசெஞ்சு புரிஞ்சுகோங்க!! வேதனையில் பாக்கியலட்சுமி கோபி! ஏன் தெரியுமா??

இதெல்லாம் நியாயமா? தயவசெஞ்சு புரிஞ்சுகோங்க!! வேதனையில் பாக்கியலட்சுமி கோபி! ஏன் தெரியுமா??


bakialakshmi-gopi-sad-video-viral

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று, விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் தொடர் பாக்கியலட்சுமி. குழந்தைகளை, கணவரை கவனித்து கொண்டு, தனக்கென ஒரு அடையாளத்தை தேடும் ஒரு சாதாரண குடும்ப தலைவியாக இருக்கும் பெண்ணின் கதையை எடுத்துரைக்கும் வகையில் இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த சீரியல் பல குடும்பத்தலைவிகளுக்கும் ஃபேவரைட்டாக உள்ளது. 
தொடரில் முன்னாள் காதலியுடன் தொடர்பில் இருந்துகொண்டு மனைவியின் கஷ்டங்களை புரிந்து கொள்ளாமல், எதற்கெடுத்தாலும் அவரையே குறைகூறி எப்பொழுதும் திட்டிக் கொண்டே இருக்கும் சிடுமூஞ்சி கணவர் கதாபாத்திரத்தில் கோபி ஆக நடித்து வருபவர் சதிஷ். இந்நிலையில் கடந்த வாரம் ஒளிபரப்பான எபிசோடுகள் மற்றும் வெளியாகியுள்ள ப்ரோமோ கோபி மீது ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் அவர்கள் சதீஷ்க்கு மோசமாக மெசேஜ் அனுப்பியுள்ளனர்.

இந்த நிலையில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், கடந்த சில நாட்களாக பாக்கியலட்சுமி சீரியல் புரோமோவை பார்த்துவிட்டு பலரும் என்னை மிகவும்  வக்கிரமான வார்த்தைகளால், கொடுமையாக திட்டி மெசேஜ் செய்கின்றனர். இது ஒரு சீரியல் என்பதை மறந்துவிடாதீர்கள். இப்படி என்னிடம் வந்து மோசமாக பேசுவது எப்படி நியாயமாகும் . தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள் என கூறியுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.