சினிமா

14 வயதிலேயே இப்படியா..? இந்த புகைப்படத்தை பார்த்தா 14 வயசுதான்னு சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க.! பேபி சாராவா இது.?

Summary:

Baby sara latest photos at age 0f 14

கடந்த 2011 ஆம் ஆண்டு இயக்குனர் AL விஜய் இயக்கத்தில், நடிகர் விக்ரம், அனுஷ்கா, அமலாபால் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் தெய்வ திருமகள். படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு முக்கிய காரணம் நடிகர் விக்ரமின் நடிப்புதான்.

அதேநேரம் நடிகர் விக்ரமுக்கு இணையாக படத்தின் வெற்றிக்கு மிக முக்கியமாக இருந்தது படத்தில் விக்ரமுக்கு மகளாக நடித்த பேபி சாராவின் நடிப்புதான். அப்பா மகளாக அந்த படத்தில் இவர்கள் இருவரும் தங்களது அருமையான நடிப்பின் மூலமாக மனதை நெருட வைத்திருப்பார்கள்.

தெய்வத்திருமகள் படத்தை அடுத்து மீண்டும் இயக்குனர் AL விஜய் இயக்கத்தில் சைவம் என்ற படத்தில் நடித்த சாரா அதன்பின்னர் பெரிதாக தமிழ் படங்களில் நடிக்கவில்லை. தற்போது 14 வயதாகும் சாராவின் சில சமீபத்திய புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.

புகைப்படத்தை பார்க்கும் ரசிகர்கள் இன்னும் சில வருடங்களில் இவர் ஹீரோயினாக நடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என கமெண்ட் செய்துவருகின்றனர்.


Advertisement