சினிமா

அச்சு அசல் நடிகர் விக்ரம் போலவே இருக்கும் சினிமா பிரபலத்தின் தந்தை! வைரலாகும் புகைப்படம்.

Summary:

Baby sara father looks a like actor vikram

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் விக்ரம். இவரது நடிப்பில் வெளியான பல்வேறு திரைப்படங்கள் மாபெரும் வெற்றிபெற்றுள்ளது. படத்தின் கதைக்காக தனது உடலை வருத்தி கதைக்கு ஏற்றாற்போல் தன்னை மாற்றிக்கொள்ளும் நடிகர்களில் ஒருவர் விக்ரம்.

இவரது நடிப்பில் வெளியான தெய்வதிருமகள் படம் இவரது நடிப்பிற்கு உதாரணம். இந்த படத்தில் இவருக்கு மகளாக நடித்தவர்தான் பேபி சாரா. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை பூர்விகமாக கொண்ட இவர் தெய்வத்திருமகள் படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார்.

விக்ரம் - பேபி சாரா இருவரும் நிஜ தந்தை - மகள் போலவே இந்த படத்தில் நடித்திருப்பார்கள். இதில் இன்னொரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால் பேபி சாராவின் தந்தை அர்ஜுன் பார்ப்பதற்கு அச்சு அசல் நடிகர் விக்ரம் போலவே உள்ளார்.

கடாரம் கொண்டான் படத்தில் வரும் நடிகர் விக்ரம் போலவே உள்ளார் பேபி சாராவின் தந்தை. இதோ அவரது புகைப்படம்.

 


Advertisement