சினிமா

தெய்வத்திருமகள் பேபி சாராவா இது? இப்படி வளர்ந்துட்டாரே! புகைப்படம் இதோ!

Summary:

Baby sara current photo goes viral

இயக்குனர் AL விஜய் இயக்கத்தில், நடிகர் விக்ரம், அனுஸ்கா, அமலாபால் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் தெய்வதிருமகள். இந்த படத்தில் நடிகர் விக்ரம் மனநலம் குன்றிய தந்தையாக தனது நடிப்பில் மிக பிரமாதமாக நடித்திருப்பார்.

படத்தில் விக்ரமுக்கு குழந்தையாக பேபி சாரா நடித்திருப்பார். இதுதான் அவருக்கு முதல் படம் என்றாலும் தனது நடிப்பாலும், முகபாவனைகளாலும் ரசிகர்கள் அனைவரைம் மிகவும் ரசிக்கும்படி நடித்திருந்தார் பேபி சாரா.

படம் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து மீண்டும் AL விஜய் இயக்கத்தில் வெளியான சைவம் படத்தில் நடித்திருந்தார். தற்போது விளம்பரப்படங்கள், ஒருசில சினிமா படங்களில் நடித்துவரும் சாரா தற்போது மிகவும் வளர்ந்து பெரிய பெண்ணாக மாறிவிட்டார்.

இந்நிலையில் தெய்வத்திருமகள் படம் வெளியாகி 8 வருடங்கள் ஆன நிலையில் நடிகர் விக்ரமை சந்தித்து அவனுடன் புகைப்படங்கள் எடுத்துள்ளார் சாரா. அதில் நன்கு வளர்ந்து மிகவும் அழகாக காட்சியளிக்கும் இவர் விரைவில் நடிகையாக வரலாம் என ரசிகர்கள் கம்மெண்ட் செய்து வருகின்றனர்.


Advertisement