பேபி நீ சுகரு.! ஜோடி சேர்ந்த அஸ்வின்- லாஸ்லியா! இணையத்தை கலக்கும் கியூட் ஆல்பம் வீடியோ!!

பேபி நீ சுகரு.! ஜோடி சேர்ந்த அஸ்வின்- லாஸ்லியா! இணையத்தை கலக்கும் கியூட் ஆல்பம் வீடியோ!!


baby-nee-sugaru-album-song-video-viral

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்களால் பெருமளவில் கவரப்பட்டு பிரபலமானவர் இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளரான லாஸ்லியா. பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின் அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தது. இந்த நிலையில் அவர் பிரண்ட்ஷிப், கூகுள் குட்டப்பன் என தொடர்ந்து சில படங்களில் ஹீரோயினாக  நடித்துள்ளார்.

அதேபோல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அனைவரின் மனதையும் கவர்ந்து பெருமளவில் பிரபலமானவர் அஸ்வின். அவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான சில தொடர்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

மேலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பிறகு அஸ்வின் விளம்பர படங்கள், மியூசிக் ஆல்பம் போன்றவற்றில் பிஸியாக இருந்தார். மேலும் என்ன சொல்ல போகிறாய் என்ற படத்திலும் அவர் ஹீரோவாக நடித்துள்ளார்.

இந்த நிலையில் தற்போது லாஸ்லியா மற்றும் அஸ்வின் இருவரும் இணைந்து பேபி நீ சுகரு என்ற மியூசிக் ஆல்பம் வீடியோவில் நடித்துள்ளனர். கலர்ஃபுல்லான உடையில், செம ரொமான்டிக்காக இருக்கும் அந்த ஆல்பம் வீடியோ வெளியாகி அனைவரையும் கவர்ந்துள்ளது. மேலும் இணையத்தில் பெருமளவில் வைரலாகி வருகிறது. லாஸ்லியா- அஸ்வின் இருவரும் ஏற்கனவே ஒன்றாக சோப்பு விளம்பரத்தில் நடித்துள்ளனர்.