சினிமா

15 வயசுதான் ஆகுது! நெடு நெடுனு வளர்ந்து ஹீரோயின் போல் மாறிய அனிக்கா! அடுத்த ஹீரோயின் ரெடி! வைரல் புகைப்படம்.

Summary:

15 வயசுதான் ஆகுது. ஆனாலும் நெடு நெடுனு வளர்ந்து ஹீரோயின் போல் மாறிவிட்டார் குழந்தை நட்சத்திரம் பேபி அனிக்கா.

15 வயசுதான் ஆகுது. ஆனாலும் நெடு நெடுனு வளர்ந்து ஹீரோயின் போல் மாறிவிட்டார் குழந்தை நட்சத்திரம் பேபி அனிக்கா.

தல அஜித்துக்கு மகளாக என்னை அறிந்தால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பேபி அனிக்கா. என்னை அறிந்தால் படத்தை அடுத்து மீண்டும் அஜித்துக்கு மகளாக விஸ்வாசம் படத்தில் நடித்திருந்தார். அஜித்துக்கு மகளாக நடித்ததால் என்னவோ ஒருசில படங்களிலையே தமிழ் சினிமாவில் புகழின் உச்சத்திற்கு சென்றுவிட்டார் அனிக்கா.

தற்போது மாமனிதன் என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார். இப்படி சினிமாவில் பிசியாக இருக்கும் இவர் தனது ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைவதற்காக தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுவருகிறார். இவர் வெளியிடும் புகைப்படங்களை பார்க்கும் சிலர், அடுத்த நயன்தாரா என புகழ்ந்தாலும், இந்த வயதில் இப்படி ஒரு போஸ், போட்டோ தேவையா என கலாய்க்கவும், அறிவுரை கூறியும் வருகின்றனர்.

இந்நிலையில் மீண்டும் அனிக்கா தனது புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில், அடுத்த ஹீரோயின் ரெடி என்பதுபோல் அவர் கொடுத்துள்ள போஸ் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.


Advertisement