இயக்குனர் பாரதிராஜா மகன் தாஜ்மஹால் நாயகன் காலமானார்.! சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!
இளையராஜாவின் இசைமழையில் நனைய தயாரா?.. அழகி படத்தின் பாடல்கள் நாளை வெளியீடு.!

கடந்த 2002ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்கர்பச்சான் இயக்கத்தில், நடிகர்கள் பார்த்தீபன், நந்திதா தாஸ், தேவயானி, பாண்டு, ஷஏஜி ஷிண்டே, வடிவேலு, ஜியார்ஜ் மரியான் உட்பட பலர் நடித்து வெளியான திரைப்படம் அழகி (Azhagi).
இப்படம் உதயகீதா நிறுவனத்தால் தயாரித்து வழங்கப்பட்டது. இளையராஜா இசையமைத்து இருந்தார். அன்றைய காலகட்டத்தில் வெற்றிப்படமாக ஓடிய அழகி, காதலை மையகருவாக கொண்டு இருந்தது. படத்தில் இடம்பெற்ற ஒளியிலே பாடல் இன்று வரை வரவேற்கப்படுகிறது.
படம் வரும் மார்ச் 29ம் தேதி மீண்டும் திரையரங்கில் வெளியாகிறது. தொழில்நுட்ப புதுமையுடன் வெளியாகவுள்ள அழகி திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், படத்தின் பாடல்கள் அடங்கிய தொகுப்பு நாளை மாலை 5 மணியளவில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் இளையராஜாவின் இசையை கேட்டு மகிழ்வோம்.