ஓவர் சீன்.. பிக்பாஸ் அசீமை திட்டிதீர்க்கும் நெட்டிசன்கள்.! என்ன காரணம்?? வைரல் வீடியோ!!Azeem not respect kid video viral

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ். இதன் 6வது சீசன் 21 போட்டியாளர்களுடன் விறுவிறுப்பாகவும், அதிரடியாகவும் சென்ற நிலையில் பிரபல சீரியல் நடிகர் அசீம் வெற்றியாளர் பட்டத்தை தட்டிச் சென்றார்.

தொடர்ந்து விக்ரமன் இரண்டாவது இடத்தையும், ஷிவின் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர். பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது அசீம் ஒவ்வொரு நாளும் சண்டை, சச்சரவு என சலசலப்புடனே கழித்தார். மேலும் அவரை தொகுப்பாளரான நடிகர் கமல் பலமுறை கண்டித்துள்ளார். ஆனாலும் அசீமுக்கு ரசிகர்கள் ஆதரவு அதிகரித்து இறுதியில் அவர் டைட்டிலை வென்றார்.

இந்த நிலையில் கடந்த வாரம் அசீம் மலேசியா சென்றுள்ளார். அங்கு கடை திறப்பு விழா ஒன்றிற்கு சென்றிருந்த அசீமை வரவேற்க சிறுவன் ஒருவன் பூங்கொத்து ஒன்றை நீட்டி கொண்டே இருந்துள்ளார். ஆனால் அதனை அசீம் கண்டுகொள்ளாமல் சென்றுள்ளார். இந்த வீடியோ வைரலான நிலையில் நெட்டிசன்கள் பலரும் அவரை ஓவர் சீன் என திட்டிதீர்த்து வருகின்றனர்.