புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
என்னப்பா இது வித்தியாசமான கெட்டப்பாக இருக்கே! குட்டையான உடையில் ஆயுத எழுத்து சரண்யா வெளியிட்ட புகைப்படத்தை பார்த்தீர்களா!
பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற நெஞ்சம் மறப்பதில்லை என்ற தொடரில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் சரண்யா. இத்தொடரின் மூலம் அவருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உருவானது. அதனைத் தொடர்ந்து சரண்யா சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரன் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.
ஆனால் ஒரு சில காரணங்களால் அவர் அத்தொடரிலிருந்து விலகினார். அதனைத் தொடர்ந்து அவர் மீண்டும் விஜய் தொலைக்காட்சியில் ஆயுத எழுத்து தொடரில் இணைந்தார். இத்தொடர் கொரோனா ஊரடங்கின்போது பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இவர் சீரியலில் நடிப்பதற்கு முன்பு பல பிரபல தொலைக்காட்சிகளிலும் செய்தி நிருபராக இருந்துள்ளார்.
இந்தநிலையில் எப்பொழுதும் சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருக்கும் சரண்யா அவ்வப்போது, வித்தியாசமான போட்ட ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்தநிலையில் ஹாலோவீன் திருவிழாவை முன்னிட்டு அரைகுறை ஆடையுடன் suicide squad-ல் வரும் harley quinn கெட்டப்பில் இருக்கும் புகைப்படங்களை எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.அது வைரலாகி வருகிறது.