BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
துபாயில் பிரம்மாண்டமாக வெளியாகிறது அயலான் படத்தின் இசை: அசத்தல் தகவல் இதோ.!
கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், ஆர். ரவிக்குமார் இயக்கத்தில், ஏ.ஆர் ரஹ்மான் இசையில் தயாராகியுள்ள திரைப்படம் அயலான். வேற்று கிரகத்தில் இருந்து பூமிக்கு வரும் ஏலியன் தொடர்பான கதை படமாக உருவாகியுள்ளது.
படத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், கருணாகரன், யோகி பாபு, ஷரத் கேல்கர், இஷா கோப்பிகர், டேவிட் ப்ரோட்டன்-டேவிஸ், பானுப்ரியா, பாலசரவணன், கோதண்டம், ராகுல் மாதவ் உட்பட பலரும் நடித்துள்ளனர்.
படத்தின் டிரைலர் காட்சிகள், பாடல்கள் அடுத்தடுத்து வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. இந்நிலையில், அயலான் படத்தின் இசை வெளியீடு விழா, துபாயில் ஜனவரி 07ம் தேதி பிரம்மாண்டமாக நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.