லீக்கான அவதார் 2 ட்ரைலர்! பேரதிர்ச்சியில் படக்குழு! உடனேயே என்ன செய்துள்ளார்கள் பார்த்தீர்களா!!

லீக்கான அவதார் 2 ட்ரைலர்! பேரதிர்ச்சியில் படக்குழு! உடனேயே என்ன செய்துள்ளார்கள் பார்த்தீர்களா!!


avatar-2-trailer-leaked

கடந்த 2009 ஆம் ஆண்டு மிகவும் பிரம்மாண்டமாக வெளிவந்து உலகம் முழுவதும் மாபெரும் வரவேற்பை பெற்ற படம்தான் அவதார். அந்த படம் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 1500 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டது. பல வித்தியாசமான தொழில் நுட்பங்களை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட இத்திரைப்படம் அனைவரையும் வியப்பில் உச்சத்திற்கு கொண்டு சென்றது. உலகம் முழுவதும் 25 கோடி கலெக்சன் செய்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பிரம்மாண்டத்தின் அடுத்தகட்டமாக தற்போது அதன் இரண்டாம் பாகம் உருவாக்கியுள்ளது. அவதார்: தி வே ஆப் வாட்டர் என பெயரிடப்பட்டுள்ள இந்த படம் வருகிற டிசம்பர் 16ஆம் தேதி உலகம் முழுவதும் சுமார் 160 மொழிகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இதன் ட்ரைலர் வரும் மே 6ம் தேதி வெளியாகும் டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் படத்துடன்  வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.

Avatar 2

இந்த நிலையில் அண்மையில் அவதார் 2 டிரைலர் ஸ்டில்கள்  வெளியாகி படக்குழுவிற்கு அதிர்ச்சியை கொடுத்தது. அதை தொடர்ந்து தற்போது படத்தின் ஒட்டுமொத்த டிரைலரும் வெளியாகி பேரிடியை கொடுத்தது. பின்னர் உடனடியாக இதன் தயாரிப்பு நிறுவனமான டிஸ்னி தங்களது சைபர் டீமை வைத்து  வீடியோக்களை அதிரடியாக நீக்கியுள்ளது.