என்னது.. நடிகை அதுல்யா பிளாஸ்டிக் சர்ஜரி செய்திருக்காரா?? முகம் மாற இதுதான் காரணமா??

என்னது.. நடிகை அதுல்யா பிளாஸ்டிக் சர்ஜரி செய்திருக்காரா?? முகம் மாற இதுதான் காரணமா??


Atulya ravi said she is not doing plstic surgery

தமிழ் சினிமாவில் காதல் கண்கட்டுதே என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை அதுல்யா ரவி. தொடர்ந்து அவர் சமுத்திரக்கனி நடிப்பில் வெளிவந்த ஏமாளி படத்தில் நடித்திருந்தார். மேலும் பின்னர் சுட்டுப் பிடிக்க உத்தரவு, கேப்மாரி, அடுத்த சாட்டை, நாடோடிகள் 2, முருங்கைக்காய் சிப்ஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

அண்மையில் இவரது நடிப்பில் வெளிவந்த கடாவர் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது.  இந்நிலையில் சமூக வலைதளங்களில் பிசியாக இருந்து போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வரும் அதுல்யா நேற்று கிளாமராக மாடர்ன் உடையில் புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். அதனைக் கண்ட ரசிகர்கள் அதுல்யா பழைய மாதிரி இல்லை. அவரது முகம், தோற்றம் வித்தியாசமாக உள்ளது எனவும் அவர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளார் எனவும் கூறினர்.

இது பரவிய நிலையில் அதுல்யா ரவி அதனை மறுத்துள்ளார். மேலும் அவர் நான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய
எனது பெற்றோர் அனுமதிக்க மாட்டார்கள். நான் கடுமையான உணவுக்கட்டுப்பாடு, தீவிர உடற்பயிற்சி மேற்கொண்டதன் காரணமாக என் முகம் மற்றும் உடல் தோற்றம் மாறியுள்ளது என்று கூறியுள்ளார்.