சினிமா

அட்லீயின் அடுத்த பட அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.!

Summary:

Atleest next movie

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக இடம் பிடித்துவிட்டார் இயக்குனர் அட்லீ. பிரமாண்ட இயக்குனர் சங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிவந்த அட்லீ ராஜா ராணி திரைப்படம் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தார். அட்லீயின் முதல் படமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றிபெற்றது.

ராஜா ராணி படத்தை அடுத்து தெறி, மெர்சல்,பிகில் என தொடர்ந்து தளபதி விஜய்யை வைத்து மாபெரும் வெற்றிப்படங்களை ரசிகர்கள் கொடுத்து இன்னும் பிரபலமானார். அடுத்ததாக அட்லீ நடிகர் சாருக்கானை வைத்து படம் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகி கொண்டே வருகின்றன. 

இந்நிலையில் இவர் இயக்குனராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் புதிய அவதாரம் எடுத்துள்ளார். இவர் தயாரிப்பில் நடிகர் ஜீவா நடிப்பில் வெளியான படம் தான் சங்கிலி புங்கிலி கதவ தொற திரைப்படம். அப்படத்தை தொடர்ந்து தற்போது புதிதாக படம் ஒன்றை தயாரிக்கவுள்ளார். அப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகிவுள்ளது. 


Advertisement