பிகில் இயக்குனர் அட்லீ மீது இப்படி ஒரு வதந்தியா?

பிகில் இயக்குனர் அட்லீ மீது இப்படி ஒரு வதந்தியா?


Atlee sharukan new movie salary details

இயக்குனர் அட்லீ இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் பிகில் திரைப்படம் வரும் அக்டோபர் 25 வெளியாக உள்ளது. விளையாட்டை மையமாக கொண்டு உருவாகியிருக்கும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். AR ரஹ்மான் இசை அமைத்துள்ளார்.

AGS நிறுவனம் 180 கோடி செலவில் இந்த படத்தை தயாரித்துள்ளது. படத்தில் விஜய்க்கு மட்டும் 50 கோடி சம்பளம் தரப்பட்டதாகவும், இயக்குனர் அட்லீக்கு 25 கோடி சம்பளம் எனவும் செய்திகள் வெளியாகிவருகிறது. இதுகுறித்து உறுதியான தகவல்கள் எதுவும் இல்லை.

atlee

இந்நிலையில் அட்லீ அடுத்ததாக பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை இயக்க போவதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவி வரும் வேளையில் அந்த படத்திற்கு சம்பளமாக அட்லீக்கு 40 கோடி பேசப்பட்டுள்ளதாக செய்திகள் பரவி வருகிறது.

அட்லீ - ஷாருக்கான் இணைவதே இன்னும் உறுதியாகாத நிலையில் அட்லீயின் சம்பளம் குறித்து பரவும் செய்திகள் வெறும் வதந்தி எனவே கூறப்படுகிறது.

atlee