BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
நடிகர் அஜித்துடன் கூட்டணியா?? பக்கா பிளான் போடும் அட்லீ.! என்ன கூறியுள்ளார் பார்த்தீங்களா!!
ராஜாராணி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ. திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து அவர் விஜய் நடிப்பில் தெறி, மெர்சல், பிகில் என தொடர்ந்து வெற்றி திரைப்படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக உயர்ந்தார்.
தொடர்ந்து அட்லி பாலிவுட்டில் களமிறங்கி ஷாருக்கான் நடிப்பில் ஜவான் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதில் ஹீரோயினாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும் வில்லனாக விஜய் சேதுபதி மிரட்டியுள்ளார். இப்படம் வெளியாகி வசூலை வாரி அள்ளியது.
-k69l6.jpeg)
அதனைத் தொடர்ந்து அட்லீ யாருடன் கூட்டணியில் இணைய உள்ளார் என ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் பேட்டி ஒன்றில் அஜித்துடன் இணைந்து பணியாற்றுவது குறித்து அட்லீ பேசியுள்ளார். அவர் கூறியதாவது, எனக்கு அஜித் சாரை ரொம்ப பிடிக்கும். என்னை முதல் முதலில் அஜித் சாரிடம் அறிமுகம் செய்தது நயன்தாராதான்.
அவரிடம் கதை சொல்ல இரண்டு முறை முயற்சி செய்தும் வாய்ப்புகள் சரியாக அமையவில்லை. அவருக்காக என்னிடம் பயங்கரமான ஸ்கிரிப்ட் உள்ளது. அவர் ஓகே சொன்னால் போதும் உடனே ஆரம்பித்து விடலாம். நான் தயாராக உள்ளேன் என கூறியுள்ளார்.