மனைவிக்கு பிறந்தநாள் சர்ப்ரைஸ் கொடுத்த அட்லி.. என்ன செய்தார் தெரியுமா.?Atlee gave surprise gift to his wife

நண்பன், எந்திரன் உள்ளிட்ட படங்களில் ஷங்கரிடம் உதவி இயக்குனராக இருந்தவர் அட்லீ. இதையடுத்து 2013ம் ஆண்டு "ராஜா ராணி" திரைப்படத்தை இயக்கியிருந்தார். தொடர்ந்து விஜயை வைத்து தெறி, மெர்சல், பிகில் என மூன்று படங்களை இயக்கியுள்ளார்.

Kollywood

இதையடுத்து சமீபத்தில் ஷாருக்கானை வைத்து "ஜவான்" படத்தை இயக்கியதன் மூலம் பாலிவுட்டிலும் காலடி வைத்துள்ளார் அட்லீ. ஜவான் படத்தில் நயன்தாரா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தப் படம் உலகெங்கிலும் 5 மொழிகளில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது.

தற்போது தனது அடுத்த படத்திற்காக பிசியாக இருக்கும் அட்லீ, தனது காதல் மனைவி ப்ரியாவின் பிறந்த நாளை முன்னிட்டு, அவர் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து "கடவுள் எனக்கு தந்த வரம் நீ. என் வாழ்வில் தேவதையாக வந்த நீ பல மாற்றங்களை செஞ்சுட்டு வர" என்று பதிவிட்டுள்ளார் அட்லீ.

Kollywood

அதோடு சர்ப்ரைசாக மஹா காளேஸ்வர் கோவிலுக்கு தனது மனைவியை அழைத்துச் சென்று, அங்கு தந்த பிரசாதங்களை பிறந்தநாள் பரிசாக மனைவிக்கு கொடுத்துள்ளார் அட்லீ. மேலும் அவர்களுடன் ஜான்வி கபூரும் தனது காதலனுடன் சென்று சாமி தரிசனம் செய்த புகைப்படங்கள் வைரலாகியுள்ளன.